×

ட்விட்டரில் எலான் மஸ்க் செய்யப்போகும் மாற்றங்கள் என்ன?: மறுசீரமைப்புகளை வலியுறுத்தி நெட்டிசன்கள் ட்வீட்

காலிஃபோர்னியா : ட்விட்டரை வாங்குவதற்கு எலான் மஸ்க் கூறிய யோசனைகளை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஆனால், மறு சீரமைப்புகள் குறித்து மதிப்பாய்வு குழு ஒன்றை அமைக்க இருப்பதாகவும் அக்குழு கூடும் முன் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளபடாது என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ள எலான் மஸ்க் அதன் சிஇஓ பராக் அகர்வாலை அதிரடியாக பணி நீக்கம் செய்தார். ட்விட்டரின் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், சட்ட துணை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சென் எட்கெட் உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்தார். எலான் மஸ்க்கின் அதிரடி நடவடிக்கைகளுக்கு மத்தியில் ட்விட்டரில் அவர் என்னன்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன. எல்லோருடைய கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் பகிர்ந்து ஆரோக்கியமான முறையில் விவாதிக்க தளம் தேவை அதற்காகவே வாங்க போவதாக எலான் மஸ்க் தொடக்கத்தில் அறிவித்திருந்தார். எலான் மஸ்க் கூறிய வெளிப்படை தன்மை ட்விட்டர்களை நிறுத்துவதற்கான எடிட்டிங் வசதி அனைத்து ட்விட்டர் கணக்குகளுக்கு ப்ளூ டிக் உள்ளிட்ட வசதிகள் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் ட்விட்டரில் வலுத்து வருகின்றன. இதனிடையே பலத்தரப்பட்ட கன்னூட்டங்களை கொண்ட உள்ளடக்க மதிப்பாய்வு குழுவை ட்விட்டரை உருவாக்கும் என்று எலான் மஸ்க் அறிவித்தார். அந்த கவுன்சில் கூடும் முன் பெரிய உள்ளடக்க முடிவுகள் அல்லது கணக்கு மறுசீரமைப்புகள் எதுவும் நடக்காது என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியதற்காக ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாக ட்விட்டர் நிறுவனம் இனி எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்காது நம்பிக்கை வந்திருப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராகவும், உண்மையை இன்னும் வலுவாக்க சரிபார்க்கும் நடவடிக்கைகளும் ட்விட்டர் நிறுவனம் இனிமேல் ஈடுபடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.    …

The post ட்விட்டரில் எலான் மஸ்க் செய்யப்போகும் மாற்றங்கள் என்ன?: மறுசீரமைப்புகளை வலியுறுத்தி நெட்டிசன்கள் ட்வீட் appeared first on Dinakaran.

Tags : Elon Musk ,California ,Twitter ,Dinakaran ,
× RELATED இந்தியா வருவதை தவிர்த்த எலான் மஸ்க் திடீர் சீன பயணம்